திங்கள், 27 ஜூன், 2011

முதல் பதிவு






மூலப்பொருளாய் உனையே
முன்னிறுத்தி முக்காலமும் - நின்
திருவடி தொழுதால்
எக்காலமும் துன்பம் எமைத்
தாக்கிடாது! திக்கெட்டும்
நிறைந்து நிற்கும் எம்
பரம்பொருளே கண்ணா-
கார்மேக வண்ணா போற்றி!

முத்தமிழில் முதலெடுத்து
சித்தமதில் உனை நிறைத்து
பாமாலைகள் செய்து - நின்
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்...

வலைப்பதிவு வயலில் - நான்
நடவு செய்யும் - இம்
முதல் கவிநாற்றினை
முடியாய்ச் சூடிக்கொள்
முகுந்தனே - எம்
முதல்வனே - நும்
பதமலர் சரணம்...


13 கருத்துகள்:

Unknown சொன்னது…

என்னுயிர்த் தோழிக்கு வாழ்த்துக்கள். பதிவுலகுக்கு வருக வருக என வரவேற்கிறேன். கவிதைகளால் கலக்க நல்வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பதிவுலகிற்கு வரவேற்கிறோம்...

வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் கவிதையும் அசத்தல்...

ம.தி.சுதா சொன்னது…

அருமையான வரிகளுடன் முதல் வருகை வாழ்த்துக்கள் சகோதரம்.. எந்த உதவியானாலும் தயங்காமல் கேளுங்கள் உதவக் காத்திருக்கிறோம்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

Mathuran சொன்னது…

ஆரம்பமே அசத்தல்...
வருக வருகவென பதிவுலகிற்கு வரவேற்கிறோம்....பதிவுலகில் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

ப்ளாக்கரில் Drop-Down Navigation Bar உருவாக்குவது எப்படி?

பெயரில்லா சொன்னது…

பா நன்று.

வாழ்த்துகள்.

பத மலரா ? பாத மலரா ?

சித்தாரா மகேஷ். சொன்னது…

தங்கள் பதிவுலக வருகைக்கு வாழ்த்துக்களுடன் என் வணக்கங்கள்.

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I

சரவணன் சொன்னது…

வலைப்பதிவு வயலில் கவிநாற்றினை நடவு செய்ய ஆரம்பித்திருக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் !!!!!

அன்பு சகோதரன் -சரவணன்

பொதிகை பிரபா சொன்னது…

கலாநேசன்;
முதல் பதிவிற்கு முதல் வாழ்த்துச் சொன்ன அன்பு நண்பனுக்கு நன்றி..

பொதிகை பிரபா சொன்னது…

பதிவுலகில் முதல் அடியெடுத்து வைத்திருக்கும் என்னை வாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்

பொதிகை பிரபா சொன்னது…

simmakkal ;

பதமலர் , பாதமலர் இரண்டுமே சரியான வார்த்தைகள் தான்..

சமுத்ரா சொன்னது…

வாழ்த்துக்கள்